×

3 மாநிலங்களில் செம்மரம் கடத்தியதாக 53 வழக்கில் தொடர்புடைய பாஜ முக்கிய தலைவர் கே.ஆர்.வெங்கடேசன் நிலமோசடி வழக்கில் அதிரடி கைது

சென்னை: ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செம்மரம் கடத்தியதாக 53 வழக்குகளில் தொடர்புடைய பாஜக முக்கிய பிரமுகர் கே.ஆர்.வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் பாஜக மாவட்ட செயலாளர் நரேஷ் உட்பட 3 பேரை தொழிலதிபருக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது ெசய்தனர். சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சுல்தான்(52). தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் ெசய்து வருகிறார். இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் இறுதியில் புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட பாடியநல்லூர் பகுதியில் 23.5 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2017ம் ஆண்டு 10 பேர் நிலத்தை விற்பனை செய்து கொடுக்கும்படி நிலத்திற்கான பவர் கொடுத்தனர். அதன்படி நான் இந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறேன். இதற்கிடையே நிலத்தை விற்பனை செய்ய முயன்ற போது, அந்த இடம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடேசன் அவரது ஆதரவாளரான திருவள்ளூர் ஆர்.ஜி.என், காலனி பகுதியை சேர்ந்த பாஜக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நரேஷ்(38), மற்றும் நரேஷின் தந்தை பிரதீப் குமார்(63) ஆகியோர் பெயரில் இருப்பது தெரியவந்தது. எனவே ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை இந்த மோசடி நபர்களிடம் இருந்து மீட்டுதர வேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் மீது ஆவடி கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நிலம் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், பாஜக பிரமுகரான கே.ஆர்.வெங்கடேசன் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது ஆதரவாளரான பாஜக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நரேஷ் மற்றும் அவரது தந்தை பெயரில் மோசடியாக ஆவணங்கள் உருவாக்கி அபகரித்தது தெரியவந்தது. மேலும், பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடேசன் பிரபல செம்மரம் கடத்தல் வியாபாரியாக இருந்து வந்ததும் தெரியவந்தது. கே.ஆர்.வெங்கடேசன் வெளிநாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தி விற்பனை செய்ததாக இவர் மீது, ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 53 வழக்குகள் இருப்பதும், சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா காவல்துறை செம்மரம் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் கே.ஆர்.வெங்கடேசனை கைது செய்ததும் தெரியவந்தது.

கைது செய்த போது கே.ஆர்.வெங்கடேசன், பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளராக இருந்தார். ஆந்திரா காவல்துறை வி.ஆர்.வெங்கடேசனை கைது செய்த அடுத்த சில மணி நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளர் பதவி மட்டும் பறிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அவர் பாஜக பிரமுகராகவே உள்ளார். எனவே, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலதிபர் சுல்தானுக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள 25.3 சென்ட் நிலத்தை தனது ஆதரவாளர் நரேஷ் மற்றும் அவரது தந்தை பிரதிப் குமார் பெயரில் மாற்றி மோசடி செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று இரவு பாஜக பிரமுகரும் செம்மரம் கடத்தல் மன்னனுமான கே.ஆர்.வெங்கடேசன், திருவள்ளூர் பாஜக மாவட்ட செயலாளர் நரேஷ், நரேஷின் தந்தை பிரதீப் குமார் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பாஜக பிரமுகம் கே.ஆர்.வெங்கடேசன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்து வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோல் பலரிடம் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே, கைது செய்யப்பட்ட கே.ஆர்.வெங்கடேசனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தொழிலதிபரின் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த வழக்கில் பிரபல செம்மரம் கடத்தல் மன்னனும் பாஜக பிரமுகரான கே.ஆர்.வெங்கடேசன் கைது ெசய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 3 மாநிலங்களில் செம்மரம் கடத்தியதாக 53 வழக்கில் தொடர்புடைய பாஜ முக்கிய தலைவர் கே.ஆர்.வெங்கடேசன் நிலமோசடி வழக்கில் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Paja ,K.K. ,Venkatesan ,Chennai ,Andhra Pradesh ,Telangana ,Tamil Nadu ,Rajasthan ,chief chief ,Rajya Pradesh ,K.K. R.R. Venkatesan ,R.R. ,Dinakaran ,
× RELATED சேலம் சமூக ஆர்வலர் புகார்: பாஜ தலைவர்...